சில தமிழ் டைரக்டர்களும் மோட்டிவேசன் தியரியும்!!!!

Thursday, April 9, 2009

நிர்வாகவியலில் மோட்டிவேசன் என்றொரு தலைப்பு மிகவும் பிரபலமானது. ஒரு நிர்வாக அதிகாரி அவருக்கு கீழுள்ள வேலையாட்களை எப்படி தாஜா செய்து வேலை வாங்குவது என்று இந்த தியரி சொல்கிறது... முதலில் அடிப்படை வசதி, இரண்டாவதாக பாதுகாப்பு, மூன்றாவதாக அன்பு, நான்காவதாக மதிப்பு, கடைசியாக தன்னிலை உணரச்செய்தல்.எல்லோருக்கும் இந்த ஹைரார்க்கி வரிசையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு முதல் இரண்டும் தேவைப்படாமல் அன்பு தேவைப்படலாம். ஒரு கம்பெனியில் மேனேஜர் பொறுப்பில் புதிதாக சேரும் ஒருவனுக்கு முதல் மூன்றும் தேவை இல்லை. இப்படி நம்முடைய தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு இந்த ஹைரார்க்கி வேறுபடும்.சினிமா தொழிலில் இருக்கும் துணை இயக்குனர்களுக்கு எந்த மாதிரியான மோட்டிவேசன் அவர்களுடைய தலைவர்களான இயக்குனர்களிடம் இருந்து தேவைப்படுகிறது? & தரப்படுகிறது? துணை இயக்குனர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் எல்லாம் வருங்கால படைப்பாளிகள். அவர்களுக்கு தேவை அங்கிகாரம் தான். அங்கிகாரம் என்பது டைட்டில் கார்டில் பெயர் போடுவதோடு முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டி 'இந்த படத்தில் நானும் வேலை செய்திருக்கிறேன்' என்று பெருமையாக அவர்கள் தன் ஊர் மக்களிடம் சொல்லும் அளவுக்கு செய்ய வேண்டும். இப்படி தன்னுடைய துணை இயக்குனர்களுக்கு அங்கிகாரம் கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலர் தான் என்று நினைக்கிறேன்.முதலில் வருபவர் பாரதிராஜா. தன்னிடம் வேலை செய்யும் திறமையான துணை இயக்குனர்கள் மற்றும் டெக்னிசியன்களை திரையில் காண்பிக்க தவறமாட்டார். மணிவண்ணன் (கொடி பறக்குது), எஸ்.ஜே.சூர்யா (கிழக்கு சீமையிலே), இளவரசு-இவர் ஒரு ஒளிப்பதிவாளர், இப்படி பலரையும் திரையில் காட்டி அங்கிகரித்த பெருமை இவருக்கே உண்டு.

கிராமத்து குயிலை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்றினார் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் கே.எஸ்.ரவிக்குமார். ரமேஷ் கண்ணா இதற்கு சிறந்த உதாரணம். இவர் இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் வருவதே இல்லை. சில சமயங்களில் தன்னுடைய துணை இயக்குனர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இவர் அமைதியாக அவர்கள் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்று நோட்டம் இடுவாராம். அப்படி ஒரு துணை இயக்குனர் இயக்கிய காட்சி தான் நாட்டாமையில் வரும் அந்த சிலம்பு சண்டை. அந்த காட்சியை இயக்கியவர் சேரன். படையப்பாவில் வரும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி நடனக்காட்சியை இயக்கியவர் ரமேஷ் கண்ணா!இவர்கள் இருவரும் இப்படி என்றால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வழக்கம் போல இந்த விஷயத்திலும் பிறரிடம் இருந்து வேறுபடுகிறார். மற்ற இயக்குனர்கள் போல் அல்லாமல் தன்னுடைய துணை இயக்குனர்களின் பெயர்களை படத்தில் வரும் ஏதாவது ஒரு பாத்திரத்துக்கு சூட்டிவிடுவார். மாதேஷ் (மதுர பட இயக்குனர்) ஒரு சில படங்களில் இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்; மற்றும் முதல்வன் படத்தை ஷங்கருடன் சேர்ந்து தயாரித்தார். தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ராஜு சுந்தரத்துக்கு அந்த பெயரைச்சூட்டி படத்தில் எல்லாரும் அந்தப்பெயரை மகேஷ் என்று தவறாகவே உச்சரிப்பது போல் நகைச்சுவையாக செய்திருப்பார்.


முத்துவடுகும் (பேரரசு தம்பி), ஷங்கரின் உதவி இயக்குனர் தான். இவரின் பெயரை ஷங்கர் முதல்வன் படத்தில் ஒரு அரசு அதிகாரிக்கும், அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜின் அண்ணன் நடத்தி வரும் சமையல் தொழிலில் ஒரு வேலைக்காரருக்கும் வைத்திருப்பார்.


ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணாவும் (செல்லமே, ஆனந்த தாண்டவம் இயக்குனர்) ஷங்கரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் தான். இவர் பெயரை ஷங்கர், இந்தியன் படத்தில் கமல், எடுபிடி வேலை செய்யும் ட்ராபிக் கமிஷனர் (ஊர்மிளா தந்தை) பெயராக பயன்படுத்தி இருப்பார். அதே போல் சிவாஜி படத்தில் வரும் ஒரு வருமான வரித்துறை அதிகாரியின் பெயரும் காந்தி கிருஷ்ணா தான்.புகழ் பெற்ற மேலே குறிப்பிட்டுள்ள இயக்குனர்களுக்கு பல உதவி இயக்குனர்கள் இருந்தும் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் திரையில் காட்டியதை தான் "managing creative people" என்று சொல்வார்கள். அதாவது திறமை இருப்பதாய் அறியப்பட்ட உதவி இயக்குனர்கள் மட்டுமே அப்படி பெருமை செய்யப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட உதவி இயக்குனர்கள் அனைவரும் தங்களுடைய முழுத்திறமையை இன்று நிரூபித்து புகழ் பெற்று இருக்கிறார்கள். அப்போ, ஒரு இயக்குனராவதற்கு கற்பனை திறமையோடு "managing creative people" என்ற கலையும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
7 comments

 1. இயக்குனர்களின் பெருந்தமையை காட்டுகிறது.

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு நன்றி கும்மாச்சி மற்றும் வண்ணத்துப்பூச்சியார் அவர்களே...

  ReplyDelete
 3. //முதலில் அடிப்படை வசதி, இரண்டாவதாக பாதுகாப்பு, மூன்றாவதாக அன்பு, நான்காவதாக மதிப்பு, கடைசியாக தன்னிலை உணரச்செய்தல்.
  //

  Nice tips.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நன்றி மதுரை சரவணன்

  ReplyDelete
 6. நல்லாருக்குங்க..ஒரு புது விஷயத்தை சொல்லி இருக்கீங்க...பகிர்தலுக்கு நன்றி...

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

ஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..

Followers

ஒரு வெளம்பரம்...

My photo

http://www.sivakasikaran.com/
Nothing special about me, except I'm a traditional man which makes people to think me as an alien or from 13th century!!!!!!!!!!!

என் பாரதி சொன்னது போல,

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..

Most Reading

Blog Archive

Sidebar One